Posts

Showing posts from March, 2021

வேண்டும் தடுப்பூசி

 கொரோனா தடுப்பூசி எங்களுக்கு அவசியமான ஒன்று !!!! போன வருடம் மார்ச் மாதம் ஏற்பட்ட கிலி இன்று வரை தொடவது யதார்த்தமே!!!! எத்தனை நபர்கள் மூட்டைமூடிச்சுகளை கட்டி கொண்டு நகரத்தை விட்டு விலகினர்!!!!! இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தெருவில் நடந்து சென்றதை பார்த்து மூட மறந்த கண்கள் எத்தனை??? ஐ டி தொழில் உட்பட்டு , தினசரி கூலி வரை வேலை இழப்பு,  ஊதிய இழப்பு , ஊழைப்பு  இழப்பு , சிறு மற்றும் குறு தொழில் மூடல் இப்படி எத்தனை . இதை விட உயிர் பயம் காரணமாக வெளியே செல்ல முடியாத நிலை உள்ள வயதானவர்கள் , நோயாளிகள், உடல் உபாதைகள் உள்ள நிரந்தர நோயாளிகள் . உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்களை 20% பாதிக்கும் , 70 வயது கடந்தவர்கள் 11% பாதிப்புக்கு வாய்ப்பு,  கோ மார்பிடி இந்த வகையில் கிட்டதட்ட பாதி மக்கள் தொகை இருக்குமா ??? ஆமா சார் சர்க்கரை வியாதியோ ரத்த கொதிப்போ  இல்லாதவர்கள் எத்தனை பேர் !!!!! இந்த சதவிகிதம் யோசித்தால் பரமபத விளையாட்டில் பாம்பு வாயில் இறங்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதை விட இந்த புள்ளிவிவரங்கள் அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தும் பயம் இருப்பது இயல்பே. சிறுநீரக மாற்று அறுவை ...