வேண்டும் தடுப்பூசி

 கொரோனா தடுப்பூசி எங்களுக்கு அவசியமான ஒன்று !!!!


போன வருடம் மார்ச் மாதம் ஏற்பட்ட கிலி இன்று வரை தொடவது யதார்த்தமே!!!!


எத்தனை நபர்கள் மூட்டைமூடிச்சுகளை கட்டி கொண்டு நகரத்தை விட்டு விலகினர்!!!!! இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தெருவில் நடந்து சென்றதை பார்த்து மூட மறந்த கண்கள் எத்தனை??? ஐ டி தொழில் உட்பட்டு , தினசரி கூலி வரை வேலை இழப்பு,  ஊதிய இழப்பு , ஊழைப்பு  இழப்பு , சிறு மற்றும் குறு தொழில் மூடல் இப்படி எத்தனை .

இதை விட உயிர் பயம் காரணமாக வெளியே செல்ல முடியாத நிலை உள்ள வயதானவர்கள் , நோயாளிகள், உடல் உபாதைகள் உள்ள நிரந்தர நோயாளிகள் .

உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்களை 20% பாதிக்கும் , 70 வயது கடந்தவர்கள் 11% பாதிப்புக்கு வாய்ப்பு,  கோ மார்பிடி இந்த வகையில் கிட்டதட்ட பாதி மக்கள் தொகை இருக்குமா ??? ஆமா சார் சர்க்கரை வியாதியோ ரத்த கொதிப்போ  இல்லாதவர்கள் எத்தனை பேர் !!!!! இந்த சதவிகிதம் யோசித்தால் பரமபத விளையாட்டில் பாம்பு வாயில் இறங்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதை விட இந்த புள்ளிவிவரங்கள் அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தும் பயம் இருப்பது இயல்பே.



சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்த நோயாளிகள் , இருதய அறுவை சிகிச்சை , கல்லீரல்,  இதை தவிர புற்றுநோயாளிகள்,  அவர்களின் தொடர் சிகிச்சை இப்படி எத்தனை நோயாளிகள் ஊர் அடங்கு காலகட்டங்களில் தேவையான மருத்துவ வசதி கிடைக்காமல் பரமபத பாம்பு வாயில் இறங்கினார்கள் என்பது இன்று வரை அறியப்படாத தகவல்கள் . என் மூன்றாவது சகோதரி கல்லீரல் மற்றும் கணைய புற்று நோயால் இறந்ததும் அவர் இறந்த அன்று அவருடைய கணவர் கொரோனா தொற்று ( என் இறந்த சகோதரிக்கு தொற்று இல்லை ) என தனிமைபடுத்துபட்டதும் மகனும் , மகளும் வெளிநாட்டிலும் , வெளி மாநிலத்தில் வரமுடியாமல் ஈம சடங்குகளை கணவர் கொரோனா பாதிப்பால் நடத்த இயலாமல் நான் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது போல் எத்தனை மக்கள் இத்தகைய சூழலில் இருந்திருப்பார்கள் .

நான் சார்ந்துள்ள மருந்து மற்றும் விற்பனை துறை ஊழியர்கள் கூட எனக்கு தெரிந்தவரை ஐந்து பேர் தமிழகத்திலு உயிர் இழந்துள்ளனர் !!!


கொரோனா காலங்களில் தன் உயிரை பணயம் வைத்து போராடிய முன் கள பணியாளர்களை யாரும் மறக்க முடியாது . அவர்களுக்கான மரியாதையை ஊர்கூடி கைதட்டுவதன் மூலம் செய்ததும் நினைவு இருக்கும். ஆனால் அதில் எத்தனை மருத்துவர்கள் , செவிலியர்கள், துப்பரவு பணியாளர்கள், காவல் துறை நண்பர்கள் உயிர் தியாகம் செய்தார்கள் என்பதையும் மறக்க முடியாது. 

இதில் அன்றும் , இன்றும் , என்றும் வீதியில் நின்று மக்களுடன் மக்களாக சமூக இடைவெளியை பெயரளவில் கூட கடைபிடிக்க முடியாத காவல் துறை நண்பர்களுக்கும் ...........


ஒரு வழக்கறிஞராக,  சமூக ஒழுக்கங்களுக்கும் , நீதிக்கும் குரல் கொடுத்துவரும்  நாங்க தினசரி காவல் நிலையம், நீதி மன்றங்கள், சமூக நல இல்லங்கள் ,மருத்துவமனைகள் என்று பல இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமும் , கட்டாயமும் உள்ளதே . சமூக சேவைகள் செய்யும் வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை தந்தால் என்ன!!!!!


உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொரோனா பாதிப்பு வரும் என பயத்தில் உள்ள எத்தனை நோயாளிகள் இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ள தயாராக உள்ளனர் என்று தெரியுமா !!!


ஆடை அலங்காரம் என தினசரி தொழில் செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்று இருக்கும் பலர்.......


தினசரி படபிடிப்பில் ஈடுபட்டால்தான் சாப்பாடு என்ற நிலை கிட்டதட்ட துணை நட்சத்திரங்கள்,  லைட் மேன் , செட்டிங் என்று அந்த துறையில் நாயக நாயகிகள் வரை தினசரி வெளியே நடமாட தேவை என்று உள்ளவர்கள்..........


ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் முன்கள பணியாளர்கள் என்ற தகுதியை போல்  அதில் பணிபுரியும் எண்ணற்ற தொழில்கள்  உள்ளது .மருத்துவர்கள் , மருத்துவர் அல்லாத பல பேரா மெடிக்கல் என்று அழைக்கப்படும் பல துறை நபர்களே , கண் பார்வை , செவி திறன் ,பேச்சு திறன் , முடக்குவியல்  துறை என்று பல முன்கள பணியாளர்கள் தினம் மருத்துவமனையில் நோயாளிகளுடன் பணிபுரிய கட்டாயத்தில் இருப்பவர்கள். லேப் டெக்னீசியன் ,

துப்பரவு தொழிலாளிகள் , வாயிற்காப்போர் கண்களுக்கு தெரியாமல் பின்னால் இருந்து செயல்படும் முன் கள பணியாளர்கள்  ..........

மருத்துவமனைக்கு வெளியே இருந்து இயங்கும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் , உற்பத்தியாளர்கள் , அதை குண்டு செல்லும் மருந்து நிறுவனங்கள், மருந்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் , ஆக்ஸிஜன் ஸிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனம் அதன் ஊழியர்கள் , மருத்துவ உபகரணங்கள் , அதன் ஊழியர்கள் , ஆய்வு கூடங்கள்...........


வீட்டு வாசலில் வந்து குப்பையை வாங்கிசெல்லும் நண்பன் , தெருவை சுத்தம் செய்யும் நண்பி, வீட்டிற்க்கு இன்னமும் வந்து  சுரம் , காச்ச,  இருக்கா ??? இலுமல் தும்முல் இருக்கா என்று அக்கறையாக விசாரிக்கும் தினக்கூலி அல்லது ஒப்பந்த தொழிலாளர்கள்.........


போக்குவரத்து அதை சார்ந்த பேருந்து , ஆட்டோ , டாக்ஸி இத்யாதி .........


ஊடக நண்பர்கள் ,அதன் இயக்கம் ...........


மேலும் தரவுகளின் தகவல்கள் ,மல்டி டோஸ் இருக்கும் இந்த தடுப்பூசி முதல் டோஸ் போட்ட உடன் நான்கு மணி நேரங்களுக்குள் ஏனைய ஒன்பது டோஸையும் உபயோகிப்பது அவசியம் , அப்படி உபயோகப்படாது வீணாக போக வாய்ப்பு உள்ளது என்று செல்கின்றன.நடுவண் அரசின் தகவல்கள் மருத்துவத்துறையில் தன்னிகரற்ற தமிழகத்தின் தடுப்பூசி சதவிகிதம் வெறும் 15% சதவிகிதம் மட்டுமே என்பதிலிருந்து எங்களையும் இணைக்கவேண்டிய அவசியமும் தெரிகிறது .


நாங்க இத்தனை பேரும் முன்கள பணியாளர்களே என்ற கவண ஈர்ப்பு அரசை எட்டுமா!!!!!




Comments